--- --:--:-- --

மகள் தற்கொலை.. ஆத்திரத்தில் காதலனை கடத்திய தந்தை…!

6

மகள் தற்கொலை செய்து கொண்ட ஆத்திரத்தில் மகளின் காதலனை கடத்திய தந்தை உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கீலா என்ற பெண் பெங்களூருவில் செவிலியர் ஆகப் பணியாற்றி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

அதற்கான காரணம் பற்றி போலீசார் விசாரித்து வரும் நிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த மகளின் காதலன் ஆன முகமது அலியை ரங்கீலாவின் தந்தை உறவினர்களுடன் சேர்ந்து கடத்திச் சென்றார்.

 

முகமது அலியுடன் இருந்த நபர் இது பற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்ததையடுத்து விழுப்புர மாவட்டம் ஆம்பூர் சுங்கச்சாவடிக்கையில் காரை சுற்றி வளைத்த போலீசார் முகமது அலியை மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon