சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னை வடலூர் அருகே பிரபல தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வண்டலூர் அருகே கிழாம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் பல்கலைக்கழகத்தை டெலிபோன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் கல்லூரி வளாகத்திற்குள் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் வெடிகுண்டு ஒரு மணி நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் கல்லூரி வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் புரளி என தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





