--- --:--:-- --

காவல்துறையினருக்கு உடல் உறுதிக்கான 3 கிலோ மீட்டர் தூரம் ஓட்டம்..!

9.2

ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பேரில்  காவலர்கள் தொடர்ந்து பணி சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக தங்களது உடல் நலனில் அக்கறை செலுத்த தவறுவதால், வாரம் ஒரு முறை தங்களுக்கு உடல்நிலை சரி செய்ய ஏதுவாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் ஓட்டமும் நடையுமாக பயிற்சி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திருவாடானை டிஎஸ்பி நிரேஷ் பழனிவேல் அறிவுறுத்தலின் படி திருவாடானை, திருப்பாலைகுடி, எஸ் பி பட்டினம், ஆர் எஸ் மங்கலம், தொண்டி, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் அனைவருக்கும் நடை மற்றும் ஓட்ட பயிற்சிக்கு மூலமாக தங்களது உடலை சீர் படுத்த பயிற்சி வழங்கப்பட்டு.

 

அதனை தொடர்ந்து திருவாடனை பேருந்து நிலையத்திலிருந்து சின்னக் கீரமங்கலம் ரவுண்டானா வரை காவல்துறையினர் ஓட்டமும் நடையுமாக சென்றனர்.  தங்களது உடல் வலிமையை சரி செய்ய ஏதுவாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டது.

இந்த பயிற்சியினை டி.எஸ்.பி நிரேஷ் பழனிவேல் துவங்கி வைத்து தானும் காவலர்களுடன் ஓடினார். இந்நிகழ்வில் திருவாடானை ஆய்வாளர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் தலைமை காவலர்கள் என 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon