--- --:--:-- --

திருப்பதியில் பலத்த மழை..பக்தர்கள் அவதி..!

10

ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சுமார் 10 மணி நேர காத்திருப்புக்கு பின் பகவானை தரிசனம் செய்தனர்.

 

நேற்று மட்டும் 62,161 பேர் தரிசனம் செய்துள்ள நிலையில் 28,923 பேர் முடி காணிக்கை செய்துள்ளனர். நேற்று 3.35 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக வரப்பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon