செங்கல்பட்டில் அரசு பள்ளியில் சேர்க்க குவிந்த பெற்றோர்களால் பரபரப்பு..!
திருக்கழுக்குன்றம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் வெங்கம்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. தேர்ச்சி விகிதம் உயர்ந்து வருவதால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கு ஏற்றார் போல் பள்ளியை விரிவாக்கம் செய்யாததால் வகுப்பறைகள் இன்றி மாணவர் சேர்க்கையை கட்டுப்படுத்தி வருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே மாணவர்களின் எதிர்காலம் கருதி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் அமைத்திட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





