--- --:--:-- --

ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதி விபத்து.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!

4

திருப்பத்தூர் அருகே ஷேர் ஆட்டோவும் காரும், நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனரும் பெண் பயணியும் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி வெளியாகியுள்ளது.

 

அச்சமங்கலம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ராணி பெண் பயணிகளுடன் ஆட்டோ ஓட்டுனர் ராஜா ஆசிரியர் நகர் மேம்பாலம் அருகே சென்றுள்ளார். அப்பொழுது எதிரே வந்த கார் மோதியது. ஆட்டோ ஓட்டுனர் ராஜாவும் மூதாட்டி ராணியும் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

 

சாலையில் விழுந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆட்டோவில் வந்த மற்ற மூன்று பெண் பயணிகளும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon