--- --:--:-- --

அருணாச்சலபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி..!

6

ருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 46 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில் அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

 

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 10 தொகுதிகளில் ஏற்கனவே பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து மீதமுள்ள 50 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

 

இதில் ஏற்கனவே வென்ற 10 இடங்களையும் சேர்த்து பாஜக 46 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. அருணாச்சல் மக்கள் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றனர். காங்கிரஸ் கட்சி ஓரிடத்தைப் பிடித்தது.

 

அருணாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில், பா.ஜ.க 46 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது.இதையடுத்து வாக்களித்த மக்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அருணாச்சல பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக இன்னும் அதிக வீரியத்துடன் பாடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon