--- --:--:-- --

முகூர்த்த நாளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டம்..!

5

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படும் எனப் போக்குவரத்து துறை வேளாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை மற்றும் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு நாளை 500 பேருந்துகளும் ஜூன் ஒன்றாம் தேதி 580 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon