கடும் வெயிலால் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவிகள்..!
பீகாரில் கடும் வெயிலால் பள்ளியில் அமர்ந்திருந்த மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கோடை வெயில் உக்கிரமாக சுட்டெரித்து வருகிறது.
அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 50.2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுமையான வெயில் வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்ப பாதிப்பை தடுக்க டெல்லியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்தொகை நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை ஓய்வு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





