--- --:--:-- --

விவேகானந்தர் பாறையில் தியானம் இருக்கப் போகிறாரா மோடி?

6

பிரதமர் மோடி வரும் 30ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் அவர் மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபட உள்ளார். ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.

 

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரையை வரும் 30-ம் தேதியோடு ஓயவிருக்கும் நிலையில் அன்றைய தினம் பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார்.

 

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தரையிறங்கும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். பின்னர் படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லும் அவர் அன்று மாலை முதல் ஜூன் 1ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தியானம் மேற்கொள்கிறார்.

 

வரும் நான்காம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலின் பொழுதும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தவுடன் உத்தரகாண்ட் மாநிலம் கேதர் நாட்டில் உள்ள குகையில் தொடர்ந்து 17 மணிநேரம் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டார் என்பது நினைவு கூறத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon