விவசாயின் வங்கி கணக்கில் ரூ.9,900 கோடி தவறுதலாக வரவு..!
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் தவறுதலாக பணத்தை அனுப்புவதும், பிறகு அவர்களிடம் இருந்து மீட்பதும் தொடர் கதையாகி வருகிறது. தற்போது, உத்தர பிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தை சேர்ந்த விவசாயின் கிசான் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.9,900 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், தனது பரோடா உ.பி. வங்கிக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவரது வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.






