--- --:--:-- --

தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு..!

7

தாம்பரம் – கொச்சுவேலி இடையே இயக்கப்பட்ட கோடைகால சிறப்பு ரயில்களுக்கு செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாம்பரம் – கொச்சுவேலி இடையே வாரத்திற்கு இருமுறை கோடைகால ரயில்கள் இயக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

 

அதன் படி இந்த கோடைகால சிறப்பு ரயிலானது நேற்று இரவு 9:40 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, இன்று காலை 8.40 மணியளவில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்து கோடைகால சிறப்பு ரயில்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

Right Menu Icon