சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 10 பேர் கைது..!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி உடுமலைப்பேட்டை நகர் பகுதியில் அமைந்துள்ள சிவா லார்ஜ் என்ற தங்கும் விடுதியில் 17 வயது சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் மூன்று சிறுவர்களை முக்கிய குற்றவாளிகள் என அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.
முதலில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்ட நிலையில் உதகையின் மேலாளரான சாமுவேல் என்பவரும் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





