கிணற்றின் அருகில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம்..!
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மழையின் காரணமாக மக்கள் பயன்படுத்தி வரும் கிணற்றின் அருகில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தால் அச்சம் ஏற்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பழமையான கிணறு ஒன்று உள்ளது.
கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் இந்த கிணற்றை ஒட்டி பெரிய அளவிலான பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.





