மனைவியை காப்பாற்ற முயன்ற கணவருக்கு நேர்ந்த சோகம்..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மின்கம்பி மீது உரசி மரக்கிளையை வெட்டிய பொழுது மின்சாரம் தாக்கி தம்பதியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
துள்ளல் பாளையத்தை சேர்ந்த தங்கவேல் – சரஸ்வதி தம்பதியினர் விவசாய நிலத்தில் சுமார் 15 அடி உயரத்திற்கும் மேல் வளர்ந்த மின்சார கம்பிகள் மீது மோதிய யூகலிப்டஸ் மரக்கிளையை அகற்றும் பொழுது மின்கம்பியில் தொரட்டி கம்பி பட்டு சரஸ்வதி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
மனைவியின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற முயன்ற கணவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.





