ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி..!
ஓடும் பேருந்தில் நடத்துனர் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக அரசின் பேருந்து கடலூருக்குள் நுழைந்த பொழுது நடத்துனர் நெஞ்சுவலியால் துடித்தார்.
ஓட்டுநர் கோபால் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை பயணிகளுடன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஒட்டி சென்றார். அங்கு மருத்துவ சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பேருந்து ஓட்டுனர் சாதுரியமாக செயல்பட்டும் நடத்துனரை காப்பாற்ற முடியாததால் பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மாற்று ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உடன் அந்த அரசு பேருந்து கரூர் புறப்பட்டது.





