கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததால் ஆயுதங்களோடு புகுந்த கும்பல்..!
கோவை சிங்காநல்லூரில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசில் புகார் அளித்ததையடுத்து தனது வீட்டில் சிலர் நோட்டமிட்டத்துடன் கத்தியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து மிரட்டியதாக பெண் ஒருவர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
கணவர் மற்றும் இரண்டு மகன்கள் உடன் வசித்து வரும் வீரலட்சுமி என்று அந்த பெண் சிசிடிவி பதிவுகளுடன் வழங்கியுள்ள புகாரில் தமது மகன்கள் சாலையில் செல்லும் பொழுது அந்த கும்பல் மிரட்டி பணம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





