நர்சுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர்..!
வத்தலகுண்டு நகரில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மணலம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன் என்பவர்.
இவர் இல்லம் தேடி மருத்துவம் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றும் நர்சுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது விருப்பத்திற்கு இணங்காவிட்டால் பணியில் இருந்து விலக்கி விடுவதாகவும் சீனிவாசன் மிரட்டியுள்ளார்.
இதனால் மணமுடைந்த சவுமியா தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சரண்யா அளித்த புகார் அடிப்படையில் அரசு மருத்துவர் சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்ட வத்தலகுண்டு காவல்துறையினர் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





