--- --:--:-- --

தம்பி மாமியாருடன் தகாத உறவு வைத்திருந்த அண்ணனை வெட்டி கொன்ற தம்பி..!

8

பொன்னேரியில் மாமியாருடன் தகாத உறவில் இருந்த அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பி காவல் நிலையத்தில் சரணடைந்தான். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கேஎம் கண்டிகையை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சிவகுமார்.

 

33 வயதான இவருக்கு திருமணமாகிய மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று மதியம் தனது தந்தை வீட்டின் வெளியே அமர்ந்து சிவக்குமார் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த கும்பல் சிவகுமாரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியது.

 

இதற்கிடையே தேவேந்திரன் என்பவர் பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்து தனது அண்ணன் சிவகுமாரை வெட்டி கொலை செய்து விட்டதாக கூறியுள்ளான். தனது மாமியார் ஜானகியுடன் சிவகுமார் தகாத உறவில் இருந்து வந்ததாகவும் இதனை கண்டித்தும் கேட்காததால் நண்பர்களுடன் சேர்ந்து அண்ணனை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon