தேசிய நெடுஞ்சாலையில் தடுமாறி விழுந்த குடும்பம்..!
சென்னை அடுத்த ஆவடியில் கையில் குச்சி வைத்து சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை மறித்து இளைஞர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் தகராறில் ஈடுபட்டார்.
அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு குழந்தைகளுடன் சென்ற குடும்பத்தினர் ரகளையில் வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்ற பொழுது தவறி விழுந்தனர். ஒரு குழந்தையின் தலை தரையில் மோதி மயக்கம் அடைந்ததால் பதறிய தாய் மற்றும் தந்தை இருவரும் அந்த வழியில் சென்ற காரில் குழந்தையை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ரகளை செய்த இளைஞரை பிடித்து அடித்து உதைத்தனர். அந்த இளைஞரை மீட்டு விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அறிந்து கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.





