தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





