--- --:--:-- --

பட்டர் கேக்கில் இறந்து கிடந்த பல்லி..!

8

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பேக்கரியில் வாங்கிய கேக்கில் பல்லி இறந்து கிடந்துதால் பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டது. ஆத்தூர் அருகே நாகப்பட்டினம் பகுதியில் ராஜு என்பவருக்கு சொந்தமான பேக்கரி செயல்பட்டு வருகிறது.

 

இந்த பேக்கரியில் வாங்கிய கேக்கில் பல்லி இறந்து கிடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரிக்கு சீல் வைத்தனர். மேலும் 15 காரணங்களை சுட்டிக்காட்டி பேக்கரி உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon