கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம்..சுயமாக பிரசவம்..குழந்தையின் கால்களை வெட்டிய கொடூரம்..!
திருமணம் ஆகாமலே கர்ப்பமான செவிலியர் தனக்கு தானே பிரசவம் பார்த்த பொழுது ஏற்பட்ட விபரீதத்தால் குழந்தை இறந்தது. சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினிஷா. சென்னை தியாகராயநகரில் தங்கை ஓராண்டாக தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஆக பணியாற்றி வந்தார். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி என்பவரோடு வினிஷாவிற்கு காதல் ஏற்பட்டு இருவரும் தனிமையில் இருந்ததாக தெரிகிறது.
இதனால் கர்ப்பமான வினிஷாவுக்கு அதிக அளவில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனக்கு தானே பிரசவம் பார்க்கலாம் என வினிஷா விபரீத முடிவு எடுத்துள்ளார். குழந்தை வெளியே வருவதில் சிக்கல் எழுந்ததால் அதன் இரு கால்களையும் அவர் வெட்டி எடுத்துள்ளார்.
இதனால் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இறந்த குழந்தையின் ஒரு காலை கழிவறையில் போட்டுவிட்டு குழந்தையின் உடலோடு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார்.
குழந்தையின் உடலை மருத்துவர்கள் பத்திரப்படுத்திய நிலையில் வினிஷா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் நிர்வாகம் அளித்த தகவலின் படி தியாகராய நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





