சிதிலமடைந்த கழிவுநீர் தொட்டி மூடியால் விபத்து..!
மதுரையில் சிதலமடைந்த கழிவுநீர் தொட்டி மூடியால் நேர்ந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தாய் மற்றும் மகள் சிக்கினர். விலாப்புறம் குடியிருப்பு 84-வது வார்டு பகுதியில் சாலை நடுவில் கழிவுநீர் தொட்டி மூடி சிதலமடைந்து சரி செய்யப்படாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற தாய் மற்றும் மகள் சிதலமடைந்த கழிவு நீர் தொட்டி மூடியை கவனிக்காமல் வாகனத்தை ஒட்டி மூடி மீது ஏறிய போது நிலைத்தடுமாறி வாகனத்துடன் தலை குப்பற கீழே விழுந்துள்ளள்ளனர்.
இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்களை மீட்டனர். நல்வாய்ப்பாக இருவரும் சிறு காயங்கள் உடன் உயிர் தப்பினர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





