--- --:--:-- --

youtube பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்த இளைஞர்..!

2

டலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் யூ டியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சிதம்பரம் மீன்சுருட்டி புறவழிச் சாலையில் உள்ள மேம்பாலத்தில் குடிபோதையில் இளைஞர் ஒருவர் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்து சாலையில் தூக்கி வீசி உள்ளார்.

 

இதையடுத்து புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்பொழுது அவர் பெயர் ஆனந்தராஜ் எனவும், youtube பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து சாலையில் வீசி பரிசோதித்து பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் தெரிவிக்கும்போது சமூக வலைதளங்களை பார்த்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது அதிகரித்து வருவதால் சைபர் கிரைம் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon