--- --:--:-- --

இளைஞர்களின் திசை மாறிய பயணம்.. கஞ்சா போதையில் வெட்டு..!

11

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே கஞ்சா போதையில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் கத்தியால் வெட்டியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

முத்து மற்றும் அவரது நண்பர்கள் அம்பத்தூரில் வெல்டிங் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நண்பர் செல்போனில் தகாத வார்த்தைகளால் சத்தமாக பேசியிருக்கிறார். அவர் சத்தமாக பேச வேண்டாம் என்று சந்திரலேகா என்பவரை வெட்டியுள்ளார்.

 

இதை தடுக்க வந்தவர்களையும் தாக்கியுள்ளார். இதை தொடர்ந்து 20 வயது விஜய் உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அனைவரும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். திருமுல்லைவாயில் காவல்துறையினர் ஏரிக்குள் தலைமறைவாக இருந்தவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சரித்திர பதிவேடு குற்றவாளி என தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon