மொபைல் நோண்டிக் கொண்டிருந்த மனைவி.. கடுப்பில் வலது கையை வெட்டிய கணவன்..!
குடியாத்தம் அருகே சமூக வலைதளங்களில் மூழ்கிய மனைவியின் கையை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் குச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த சேகர் – ரேவதி தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
இதில் இரண்டு மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார். மனைவி ரேவதி சமூக வலைதளங்களில் அதிகநேரம் செலவிட்டு வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியை சேகர் கண்டித்ததால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சேர்க்கை அரிவாள் ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.
ரேவதி அங்கிருந்து அவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





