கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு..NIA அதிகாரிகள் விசாரணை..!
கோவை கார் குண்டு வெடிப்பு நபர்களை சத்தியமங்கலத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 12 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இவர்கள் சத்தியமங்கலம் கடலூர் காட்டில் தங்கி குண்டுவெடிப்பு தொடர்பாக திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இன்றைய அதிகாரிகள் கடம்பூர் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரித்து இருக்கின்றனர்.
அவர்கள் தங்கியிருந்த பகுதியில் அவர்களுக்கு உதவிய மாட்டு வியாபாரி மற்றும் சிலரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடம்பூர் மலைப்பகுதியில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது யார் எனவும் விசாரித்து வருகின்றனர்.





