--- --:--:-- --

புதுச்சேரியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து சுயேட்சை வேட்பாளர் தர்ணா..!

7

புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் தருவதாகவும் இதனால் தேர்தல் ரத்து செய்ய வலியுறுத்தியும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக அதிமுக நாம் தமிழர் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 26 பேர் போட்டியிடுகின்றனர். இருப்பினும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது.

 

இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளின் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியவர் புதுச்சேரியில் தேர்தலை உடனடியாக ரத்து செய்யக்கோரி கையில் கருப்பு துணியை ஏந்தியவாறு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon