--- --:--:-- --

விமான விபத்தில் மரணம்.. நடிகை சௌந்தர்யா 20-வது ஆண்டு நினைவு நாள்..!

8

சீகரிக்கும் அழகு, பார்ப்போரை ஒரு நொடியேனும் ரசிக்க வைக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு கொண்ட நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுவுந்தர்யா, தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும் இவரை தெலுங்கு தமிழ் சினிமா கொண்டாடித் தீர்த்தது.

 

1972-ல் பிறந்த சவுந்தர்யா 1992-ல் கன்னடம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் கோலோச்சினார். இந்தியிலும் அமித்தாப்பச்சனுடனும் நடித்து தேசிய அளவிலும் சவுந்தர்யா பிரபலமடைந்தார்.

 

சவுமியா என்ற இயற்பெயர் கொண்ட சவுந்தர்யா நடித்த பொன்னுமணி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். கார்த்திக் உடன் அந்த படத்தில் இடம்பிடித்த நெஞ்சிக்குள்ளே பாடல் இன்றளவும் பலராலும் ரசித்து கேட்கப்படும் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

 

1993 ஆம் ஆண்டு வெளியான பொன்னுமணி திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், கிட்டத்தட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சவுந்தர்யா வலம் வந்தார். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த அவர், தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் என அப்போதைய உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தார்.

 

தவசி, சொக்கத்தங்கம் போன்ற படங்கள் பட்டித் தொட்டி எங்கும் மிகவும் பேசப்பட்ட படமாக மாறியிருந்தது. அருணாச்சலம், படையப்பா படங்கள் தமிழ் சினிமாவில் வசூலை வாரிக்குவித்த படங்கள், அந்த இரண்டு படங்களிலும் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை சவுந்தர்யா ஈர்த்திருந்தார். 1992-ல் தொடங்கி 2003 வரை தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தார் சவுந்தர்யா. தனது நடிப்புத் திறமையால் பிரபலமாக இருந்த அதே நேரம், அந்த புகழை அரசியலிலும் புகுத்த நினைத்திருந்தார் சவுந்தர்யா.

 

2004-ல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அவர், தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரிக்க தனது சகோதரர்,அமர்நாத்துடன் இதே நாளில் செஸன்னா என்ற சிறிய விமானத்தில் பெங்களூருவில் இருந்து கரீம்நகருக்கு பயணித்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

 

இன்றளவும் கர்நாடகத்தில் சவுந்தர்யாவின் மறைவை நினைத்து கண்ணீர் சிந்தும் ரசிகர்கள் ஏராளம். தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனி இடம்பிடித்திருந்த நடிகை சவுந்தர்யாவின் 20 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Right Menu Icon