பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு.. முக்கிய குற்றவாளிகள் கைது..!
பெங்களூரு ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. மார்ச் 1ம் தேதி நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கர்நாடகா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கொல்கத்தாவில் தங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்பொழுது போலி ஆவணங்களை பயன்படுத்தி தங்கி இருந்த இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.





