--- --:--:-- --

சொத்து மதிப்பு வழக்கில் டி.கே.சிவகுமாருக்கு லோக் ஆயுக்தா நோட்டீஸ்..!

3

ர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தனது சொத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக டி.கே.சிவகுமார் மீது கடந்த பாஜக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

 

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் சிபிஐக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. மேலும் லோக் ஆயுக்தா விசாரணை நடத்தும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.

 

இதனையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல் செய்திருக்கும் நிலையில் சிவகுமாருக்கு லோக் ஆயுக்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிபிஐயிடம் தாக்கல் செய்த சொத்து ஆவணங்களை தங்களிடம் சமர்ப்பிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon