பார்வை மாற்றுத்திறனாளியை பேருந்தில் ஏற்றிச் செல்லாத ஓட்டுநர்..!
சென்னை அடுத்த பூவிருந்தவள்ளியில் பார்வை மாற்றுத்திறனாளியை பேருந்தில் ஏற்றிச் செல்லாதது குறித்து தட்டிக் கேட்டதாக நடத்துனர் தரக்குறைவாக பேசியுள்ளார்.
பேருந்து நிலையத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதனால் சமூக ஆர்வலர் ஒருவர் மாற்றுத்திறனாளியை இருசக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்டு பேருந்தில் முந்தி செல்ல முயன்றார்.
ஏன் நிறுத்தாமல் சென்றீர்கள் என பேருந்து ஓட்டுனரிடம் சமூக ஆர்வலர் கேட்டுள்ளார். அப்பொழுது நடத்துனர் ஒருமையில் திட்டி தரக்குறைவாக பேசியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





