--- --:--:-- --

போலி நகைகளை அடமானம் வைத்து பல கோடி ரூபாய் மோசடி..!

1

காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கியில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு அடமான நகை குறித்து ஆய்வு நடைபெற்ற பொழுது நகைகளின் எடை, தரம் ஆகியவற்றின் சோதனையை அடுத்து மூன்று இந்தியன் வங்கி கிளைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

அப்பொழுது 2023 ஆம் ஆண்டு மே முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அமைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என கண்டுபிடிக்கப்பட்டது.

 

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராணிப்பேட்டையை சேர்ந்த மேகநாதன், பிரகாஷ், சுரேந்திர குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மோசடியில் ஈடுபட்டவர்களை சென்னை காவல்துறை தேடி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon