கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் : உதயநிதி
இந்தியா கூட்டணி ஆட்சியில் கேஸ் சிலிண்டரின் விலை 500 ரூபாய்க்கு வழங்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், திமுக இளைஞரணி செயலாளர் திமுக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களை பட்டியலிட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக குறிப்பிட்டவர், ஜிஎஸ்டி மூலம் நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டை ஒருபோதும் கண்டு கொள்ளாத பிரதமர் மோடி தேர்தல் வந்தவுடன் தமிழ்நாட்டின் மீது அக்கறை இருப்பது போல காட்டிக் கொள்வதாக விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





