--- --:--:-- --

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!

6

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

 

கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று வெளியாக இருப்பதாக சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

இதற்கான இணையதள முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண் மறு மதிப்பீடு செய்ய ஏப்ரல் 1ம் தேதி முதல் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon