--- --:--:-- --

ஏப்ரல் 6 ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு..!

7

நாடாளுமன்ற தேர்தலுக்கான பல்வேறு அதிரடி அறிவிப்புகளுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வருகிற ஆறாம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூன்று தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

இதற்கான பொறுப்புகளை மாநில முன்னால் முதலமைச்சர் மற்றும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தேர்தல் அறிக்கையில் மகளிர் மேம்பாட்டுக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon