--- --:--:-- --

குழந்தையை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய தாய் கைது..!

4

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு மாத ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார். விஜயநல்லூர் விஜயா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்.

 

இவரது மனைவி சத்யா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அண்மையில் சத்யாவுக்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த குழந்தையை திடீரென காணவில்லை என சத்யா அலறி துடித்துள்ளார்.

 

தகவல் அறிந்து சோழவரம் காவல்துறையினர் மற்றும் உறவினர்கள் தேடிய பொழுது அருகில் உள்ள கிணற்றில் குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்த பொழுது சத்யா குழந்தையை மறைத்து எடுத்துச் சென்று கிணற்றில் வீசியது தெரிய வந்தது.

 

இதையடுத்து சத்யாவிடம் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் குறை பிரசவத்தில் குறைந்த எடையில் குழந்தை பிறந்ததால் எதிர்காலத்தில் உடல் ஊனம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் தன்னைவிட குழந்தையிடம் ரமேஷ் பாசத்தை காட்டத் தொடங்கியதாலும் கிணற்றில் வீசி கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து சத்யாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Right Menu Icon