சாலையில் தரிக்கட்டு ஓடிய கார்.. டீ கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு..!
சங்கரன்கோவில் அருகே தரிக்கட்டு ஓடிய கார் டீக்கடைக்குள் புகுந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து சென்று கொண்டிருந்த கார் சண்முகநல்லூர் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தேநீர் கடைகளுக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்தகாவல்துறையினர் காரை அப்புறப்படுத்தி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






