--- --:--:-- --

சிறையில் இருந்து முதலமைச்சர் பணியை தொடர்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..!

3

துபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தமது முதலமைச்சர் பணியை சிறையிலும் தொடர்கிறார்.

 

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கடந்த 21ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆறு நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு சென்றாலும் அரவிந்த் கெஜ்ரிவாலே முதலமைச்சராக தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.

 

இந்திய அரசியல் சாசனத்தை பொறுத்தவரை ஒரு அமைச்சர் குற்றவாளி என நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் வரை அவர் சிறையில் இருந்தாலும் முதலமைச்சராக தொடரலாம் என்பதன் அடிப்படையில் அந்த கட்சி அறிவித்துள்ளது.

 

இதனிடையே டெல்லியில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் மக்கள் குடிநீர் மற்றும் கழிவறை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக தீர்வு காணமாறு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

 

சிறையில் இருந்தபடி முதலமைச்சரின் உத்தரவு பிறப்பித்தார் என்பது நாடகம் என விமர்சித்துள்ள பாஜகவினர் முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து வரும் 31-ஆம் தேதி டெல்லி ராமலிங்கம் மைதானத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

 

Right Menu Icon