--- --:--:-- --

இரட்டை இலை சின்னம் வழக்கு.. ஓ.பி.எஸுக்கு பின்னடைவு..!

1.1

ரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேடு பயன்படுத்த ஓபிஎஸுக்கு ஏற்கனவே உள்ள தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்தாண்டு உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஓபிஎஸுக்கு நிரந்தர தடை விதித்து ஆணையிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீட்டு மனு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது இரட்டை இலை சின்னத்தை தனது தலைமையில் இருந்த மதுசூதனனுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது என்று ஓ.பி,எஸ் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க கூடாது எனவும் ஓ.பி.எஸ். தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள்அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகிகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.

 

தேர்தல் ஆணையத்தை அணுக தடையில்லை என்றும், மேலும் தேர்தல் முடிந்த பிறகு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர். இறுதி விசாரணைக்காக வழக்கு ஜூன் மாதம் பத்தாம் தேதிக்கு தள்ளி வைப்பதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Right Menu Icon