--- --:--:-- --

வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள்.. துணிச்சலுடன் விரட்டி அடித்த தாய் மகள்..!

7

ஹைதராபாத்தில் துப்பாக்கி மற்றும் கத்தியோடு வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையர்களை தாயும் மகளும் துணிச்சலோடு விரட்டி அடித்துள்ளனர். ஹைதராபாத்தில் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் புகுந்து கொள்ளையர்களை தாயும் மகளும் துணிச்சலுடன் புரட்டி எடுத்தனர்.

 

ஹைதராபாத் பகுதியில் வீடு ஒன்றில் ஹெல்மெட், மாஸ்க் கனிந்தவாறு துப்பாக்கி மற்றும் கத்தியுடன் புகுந்து கொள்ளையர்களை கண்டு தாயும், மகளும் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு மிரட்டலும் விடுத்துள்ளனர். இருப்பினும் துணிச்சலோடு கொள்ளையர்களை தாய் மகள் விரட்டி அடித்தனர்.

 

இதனையடுத்து கொள்ளையர்கள் மிரண்டு ஓடினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கொள்ளையர்களிடமிருந்து துப்பாக்கிகளையும் இருவரும் பறிமுதல் செய்தனர். இதனிடையே குழந்தைகளை விரட்டி அடித்த வீரமங்கைகளுக்கு வடக்கு நகர துணை காவல் கண்காணிப்பாளர் ரோகிணி பிரியதர்ஷினி நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon