--- --:--:-- --

பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி எப்போது..?

6

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில் விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற பிளஸ் டூ தேர்வுகளை மூன்று லட்சத்து 58,701 மாணவர்களும் நான்கு லட்சத்து 13 ஆயிரத்து 998 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் ஏழு லட்சத்தை 70 ஆயிரத்து 200 பேர் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். தனித் தேர்வுகளாக 21,825 நபர்கள் பங்கேற்றனர்.

 

திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் 83 இடங்களில் விடைத்தாள் திருத்தம் செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விடைகள் திருத்தும் பணி தொடங்கப்பட உள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதி வரை சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பிளஸ் டூ விடைத்தாள்களை திருத்தும் பணியில் மேற்கொள்ள இருக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon