குழந்தை இல்லாத விரக்தியால் 21 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!
திருவண்ணாமலை மாவட்டம் போரூரில் குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போரூர் அடுத்த ராம் பாக்கத்தை சேர்ந்த தம்பதி சீனிவாசன் – சத்தியா.
இருவருக்கும் இடையே குழந்தையின்மையால் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளே ஆன நிலையில் 21 வயது இளம்பெண் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





