--- --:--:-- --

திருப்பூரில் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுத்த வடமாநிலத்தவர் ..!

7

ஹோலி பண்டிகை கொண்டாட திருப்பூரில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

 

பின்னலாடை நகரான திருப்பூரில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிக அளவில் வட மாநில தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். ஒருவருக்கொருவர் முந்தியடித்துக் கொண்டும் ஜன்னல் வழியாக ஏரியும் இடம் பிடித்து வருகின்றனர்.

 

தற்பொழுது திருப்பூரில் பின்னலாடை ஆர்டர்கள் குறைந்துள்ளனர். வட மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை என்று பின்னலாடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon