பள்ளி மாணவர்களை மர்ம நபர்கள் காரில் கடத்த முயற்சி..!
கிருஷ்ணகிரியில் மர்ம நபர் சிலர் தங்களை காரில் கடத்த முயன்றதாக அரசு பள்ளி மாணவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது காரில் வந்த மர்ம நபர்கள் பள்ளிக்கு கொண்டு சென்றிருந்த மாணவர்களில் இருவரை காரில் ஏற்ற முயன்றுள்ளனர்.
அப்போது அவர்களிடம் இருந்து தப்பி சென்ற மாணவன் காருக்குள் இரண்டு பேர் இருந்ததாகவும் காவல் நிலையத்தில் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





