சென்னையில் பள்ளி மாணவன் உயிரை பறித்த பாஸ்பரஸ்,..!
சென்னை கொளத்தூரில் பாஸ்பரஸ் உள்ளிட்ட பொருட்களை வைத்து ஆய்வு செய்த பொழுது விபரீதம் நடந்துள்ளது. கெமிக்கல் பொருட்கள் திடீரென வெடித்ததில் 12 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளான்.
கெமிக்கல் பொருட்கள் திடீரென வெடித்ததில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ் டூவில் அறிவியல் பாடம் எடுத்து படித்து வந்த ஆதித்ய பிரணவ் என்று மாணவனுக்கு அறிவியல் சோதனைகள் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளது.
புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று அவரின் ஆசையே உயிருக்கு எமனாக மாறி விபரீதம் நடந்துள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்த 5க்கும் ஏற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






