மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது..!
தேன்கனி கோட்டை அருகே மருத்துவம் படிக்காமல் பொதுமக்களை ஏமாற்றி வந்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது அந்திவனப் பள்ளியைச் சேர்ந்த நபர் ஆங்கில மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து மருந்துகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரையும் கைது செய்தனர்.






