சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு, புதுச்சேரி காவல்துறையினர் ஆலோசனை..!
மக்களவைத் தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் இருப்பதால் தமிழகம் – புதுச்சேரி எல்லையில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த குற்றவாளிகளின் பட்டியல் பரிமாறி கொள்ளப்பட்டது, இரு மாநில காவல் துறையினரும் நட்புணர்வுடன் தகவல்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் விபரீதங்களை தவிர்க்க முடியும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க தொடர் சோதனை நடத்திவரும் காவல்துறையினர் தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.






