கல்லூரி விடுதியில் திடீர் போராட்டம்.. அந்த தண்ணீரை குடித்தால் அவ்வளவுதான்..!
கோவை அருகே பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கு தரமற்ற குடிநீர் வழங்குவதாக கூறி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் எட்டி மடையில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகத்தில் பயிலும் பல்வேறு மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தரமற்று இருப்பதாகவும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவர்கள் பல முறை புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்றிரவு பல்கலைக்கழகம் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதி மாணவர்களுக்கு சொந்தமாக குடிநீர் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.






